ஐநாவின் கௌரவ பட்டியலில் இந்தியா

ஐநாவின் கௌரவப் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வழக்கமான வரவு செலவு திட்டத்துக்கான 35.187 மில்லியன் டொலரை இந்தியா முன்கூட்டியே செலுத்தியுள்ளது.

இதன்மூலம் உரிய காலத்தில் நிதி செலுத்தும் நாடுகளுக்கான ஐநாவின் கௌரவப் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா சபை கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் வேளையில் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் நிதி செலுத்திய 47 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும் இந்தியாவின் பங்களிப்பை ஐநா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் பாராட்டியதோடு, இந்தியாவின் ஒற்றுமை சிலையைக் குறிப்பிட்டு பெருமைப்படுத்தி தெரிவித்துள்ளார்

அமெரிக்க நாடுகள் தங்களது நிதிப் பங்கைச் செலுத்த தவறியுள்ள நிலையில், இந்தியா தனது கடமைகளை சரியாக நிறைவேறியுள்ளது. ஐநாவின் மொத்த வரவு செலவு திட்டத்தில் 1.016 சதவீத பங்கினை இந்தியா செலுத்தியுள்ளதன் மூலம்

உலக அரங்கில் இந்தியாவின் நம்பகத்தன்மை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.