கனடா தேர்தல்: மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி

கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மூன்று இடைத்தேர்தல் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள அந்தக் கட்சி, 343 இடங்கள் கொண்ட பாராளுமன்றத்தின் கீழ்சபையில் 174 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், அரசாங்கத்தை நிலையான முறையில் நடத்த தேவையான எளிய பெரும்பான்மையை லிபரல் கட்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.