காசாவை நோக்கி கிரெட்டா தன்பேர்க்குடன் பயணிக்கும் கப்பலை தடுத்து நிறுத்த தயாராகின்றது இஸ்ரேலிய கடற்படை

காசாமீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு சவால் விடும் நோக்கி காலநிலை செயற்பட்டாளர் கிரெட்டா தன்பேர்க்குடன் பயணிக்கும் பிரீடம் புளோட்டிலாஅமைப்பின் கப்பலை    இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தும் என டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளதாவது

காசாமீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு சவால் விடும் நோக்கி காலநிலை செயற்பட்டாளர் கிரெட்டா தன்பேர்க்குடன் பயணிக்கும் கப்பல் இஸ்ரேலிய கடற்பரப்பினை நெருங்கினால் இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தும்.

பாலஸ்தீன சார்பு இஸ்ரேல் எதிர்ப்பு பீரிட்டம் புளோட்டிலா கூட்டணி ஏற்பாடு செய்துள்ள மட்லீன் படகில் மோதல்கள் இடம்பெற்றால்,இராஜதந்திர சமூகம் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிடும், பிரான்ஸ் பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே இந்த படகின் பயணத்தை கண்காணித்துவருவதாக தெரிவித்துள்ளன.

பிரிட்டனின் கொடியுடன் பயணிக்கும் இந்த படகில் 12 செயற்பாட்டாளர்கள் உள்ளனர் அவர்களில்,பிரான்சை சேர்ந்த பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹசனும் உள்ளார்.

கடந்த பெப்ரவரியில் இவர் இஸ்ரேலிற்குள் நுழைய முற்பட்டவேளை இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது,இஸ்ரேலிற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

படகின் பாதையை கண்காணித்துவருவதாகஇஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

மத்தியதரை கடலை கடப்பதற்காக சூடானின் குடியேற்றவாசிகள் பயன்படுத்தும் கடற் பாதையிலேயே இந்த படகு பயணிக்கின்றது.

இந்த படகு காசாவை நோக்கி பயணித்தால்,கடற்படை அதனை தடுத்து நிறுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மட்லீன் வாரஇறுதியில் காசா பள்ளத்தாக்கினை சென்றடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மட்லீன் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் கடல்சார் முற்றுகையை நடைமுறைப்படுத்தியுள்ளோம்,அரசியல் பிரிவின் வழிகாட்டுதல்களுடன் பல்வேறு சூழ்நிலைக்கும் தயாராவதாக தெரிவித்துள்ளது.

படகில் ஆறு பிரான்ஸ் பிரஜைகள் உள்ளதால் பிரான்ஸ் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் இராஜதந்திரியொருவர் ,படகில் உள்ள தங்களின் நாட்டவர்களிற்கு தேவைப்பட்டால் உதவிகளை வழங்க பிரான்ஸ் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சனல் 12க்கு தெரிவித்துள்ள பிரிட்டிஸ் அதிகாரியொருவர்,பிரிட்டிஸ் கொடியுடன் அந்த படகு பயணிப்பது பிரிட்டனிற்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஸ் கொடியுடன் அது பயணிப்பதை தடுக்குமாறு இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்தது,எனினும் பிரிட்டனின் கடற்பயண விதிகளை சுட்டிக்காட்டி பிரிட்டன் அதனை நிராகரித்துவிட்டது, மட்லீனினதும் அதில் பயணிப்பவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரிட்டிஸ் அரசாங்கம் இஸ்ரேலை கேட்டுக்கொண்டுள்ளது என அந்த ஊடகம்தெரிவித்துள்ளது.

பிரிட்டனும் பிரான்சும் இஸ்ரேலிற்கு எதிரான அதன் காசா நடவடிக்கைகளிற்கு எதிரான தொனியை சமீபத்தில் அதிகரித்துள்ளன.

கடந்த மாதம்; காசாவிற்கு செல்லமுயன்ற சுதந்திர புளோட்டிலாவில் பயணித்தவர்கள் இஸ்ரேல் தங்கள் மீது ஆளில்லா விமான தாக்குதலை மேற்கொள்ள முயன்றது என குற்றம்சாட்டினர்.