கேரள மாநிலம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ஓவியர் வாசுதேவன் நம்பூதிரி(வயது97). வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். மலையாளத்தில் உள்ள இலக்கியங்களில் பல கதா பாத்திரங்களை தனது ஓவியங்கள் மூலம் உயிர்பெற செய்தவர் வாசுதேவன் நம்பூதிரி. 1925-ம் ஆண்டு பிறந்த இவர் இளம் வயதிலேயே ஓவியம் வரைய தொடங்கினார்.
மேலும் சிறு வயதிலேயே சமஸ்கிருதம் மற்றும் பாரம்பரிய மருத்துவம் பயின்றார். சிறுவயதில் தனது வீட்டின் சுவர்களில் கரியாலும், கோவில் முற்றத்தில் மணலை பயன்படுத்தி வரைய தொடங்கினார். அவரது ஆர்வத்தை பார்த்த பிரபல சிற்பியும், ஓவியருமான வரிக்காச்சேரி நம்பூதிரி சென்னைக்கு அழைத்துச் சென்றார்.
அதன் பிறகு 1960-ல் கேரளா திரும்பிய அவர் புகழ் பெற்ற எழுத்தார்களின் நாவல்கள், சிறுகதைகளை தனது ஓவியத்தின் மூலம் விளக்கினார். நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாசுதேவன் நம்பூதிரியின் ரசிகர்களா வர்கள். இவருக்கு மிருணாளினி என்ற மனைவியும், பரமேஸ்வரன், வாசுதேவன் என்ற மகன்களும் உள்ளனர். அவரது மறைவிற்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.