சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள் சங்கமானது தற்போது நியூஸிலாந்திற்கு கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
USAID இன் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த சுற்றுப்பயணம் ஜூலை 27 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி முடிவடையவுள்ளது.
குறித்த குழுவானது சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, சீதா அரம்பேபொல, ரோகினி குமாரி விஜேரத்ன, பவித்ராதேவி வன்னியாராச்சி, கீதா சமன்மலே குமாரசிங்க, டயானா கமகே, தலதா அத்துகோரள, கோகிலா குனவர்த்னா, முடித்த ப்ரிஷாந்தி,ராஜிக்க விக்ரமசிங்க மஞ்சுள திஸாநாயக்க மற்றும் ஹரினி அமரசூரிய உள்ளிட்ட 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.
”அவர்களது நிகழ்ச்சித்திட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுடனான சந்திப்புகளும் நடைபெறும்” என சிறிலங்காவுக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.