ஜி-20 மாநாட்டில் உக்ரைன் போர்தான் முக்கிய தலைப்பாக இருக்கும்: அமெரிக்கா

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த ஜி-20 மாநாட்டில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதுதான் முக்கிய தலைப்பாக இருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

”எங்களுடைய கூட்டணி நாடுகளுடன் நடைபெறும் உரையாடலில் உக்ரைன் போர் குறித்ததுதான் முக்கிய தலைப்பாக இருக்கும். இனிவரும் உரையாடல்களில் இதற்குதான் முக்கியத்துவம். ஜி-20 மாநாட்டில் இது உண்மையாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கி சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. தற்போது டிரோன் தாக்குதல் அதிகரித்துள்ளது. உக்ரைன் தானிய ஏற்றுமதி செய்ய முடியாத அளவிற்கு ரஷியா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இது உலகளவில் தானிய தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்