ஜேர்மன் மாகாணமொன்றில் நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சியை தோற்கடித்துள்ளது பிரபலமாகாத சிறிய கட்சி ஒன்று.ஜேர்மனியின் Baden-Württemberg மாகாணத்தில் நேற்று தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் ஆளுங்கட்சியான The Christian Democratic Union of Germany (CDU) கட்சியை, கிரீன்ஸ் கட்சி தோற்கடித்துள்ளது.
கிரீன்ஸ் கட்சிக்கு 30.2 சதவிகித வாக்குகள் கிடைக்க, CDU கட்சிக்கு 29.7 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.
AfD கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு 18 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.
SPD கட்சிக்கு 5.5 சதவிகித வாக்குகளும், FDP கட்சிக்கும் லெஃப்ட் கட்சிக்கும் 5 சதவிகித வாக்குகள் கூட கிடைக்கவில்லை.





