டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சியில் இர­சி­கர்­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட 2.3 ரிக்டர் நில அதிர்வு

அமெ­ரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்­சி­யொன்றில் இர­சி­கர்­களால் 2.3 ரிக்டர் அள­வி­லான நில அதிர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக புவி­யியல் பேரா­சி­ரியர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

வொஷிங்டன் மாநிலத்­ தி­லுள்ள சியாட்டில் நக ரில் கடந்த 22 ஆம்  திகதி மேற்­படி இசை நிகழ்ச்சி நடை­பெற்­றது.

இந்­நி­கழ்ச்­சி­யின்­போது 2.3 ரிக்டர் அள­வி ­லான நில அதிர்வு பதி­வா­கி­ய­தாக வெஸ் ட்டர்ன் வொஷிங்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த புவி­யியல் பேரா­சி­ரி­ய­ரான ஜெக்கி கெப்லன் அவ்ர்பாக் தெரி­வித்­துள்ளார். இர­சி­கர்­களின் செயற்­பா­டுகள் அல்­லது ஒலி­பெ­ருக்­கி­க­ளினால் இப்­பா­ரிய அதிர்வு ஏற்­பட்­டி­ருக்­கலாம் என அவர் கூறி­யுள்ளார்.

சியாட்டில் நகரில் இர­சி­கர்­களின் செயற்­பா­டு­களால் ஏற்­பட்ட நில அதிர்வில் இது புதிய சாத­னை­யாகும். இதற்­குமுன் 2011 ஆம் ஆண்டு சியாட்டில் சீஹாவ்க்ஸ், நியூ ஓர்லீன் செயின்ற் அணி­க­ளுக்கு இடை­யி­லான அமெ­ரிக்கப் பாணி உதை­பந்­தாட்டப் போட்­டி­யின்­போது 2 ரிக்டர் நில அதிர்வு பதி­வா­கி­யி­ருந்­தது.

டெய்லர் ஸ்விப்ட்டின் சியாட்டில் இசை நிகழ்ச்சி கடந்த 22, 23 ஆம்  திகதிகளில் நடைபெற்றபோது மொத்தமாக 144,000 இரசிகர்கள் இந்நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டிருந்தனர்.

சமீபத்திய செய்திகள்