தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு – ஏழு பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் பகுதியில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் ஏழு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

பெக்கர்ஸ்டாலில் இரண்டு வாகனங்களில் வந்த சுமார் 12 அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள்,வாடிக்கையாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா உலகிலேயே அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 63பேர்  கொல்லப்பட்டதாக பொலிஸாரின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.