பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி இந்திய ரூபா)) பெறுமதியான ஆபரணங்களை கொள்ளைடித்துச் சென்றுள்ளனர்.
ஆடம்பர கடிகார விற்பனை நிலையமொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
10 முதல் 15 மில்லியன் யூரோ பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பாரிஸ் வழக்குத்தொடுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டிப்டொப்பாக ஆடையணிந்த 2 ஆண்கள், ஒரு பெண் அடங்கிய குழுவினர், கைத்துப்பாக்கியொன்றுடன் கடையின் உள்ளே நுழைந்துள்ளனர்.
அங்கிருந்த ஊழியர்களை தரையில் படுக்கைவைத்துவிட்டு, பொருட்களை கொள்ளையடித்துச் விட்டு தப்பிச்சென்றுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.