பிரான்சின் அடுத்த ஜனாதிபதி யார்? கட்டியம் கூறும் தேர்தல் முடிவுகள்

பிரான்சில், நேற்று முதல், அதாவது, மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல், மேயர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் துவங்கியுள்ளன.

பிரான்சைப் பொருத்தவரை, மேயர் தேர்தல் என்பது, வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.

ஆக, மேயர் தேர்தல்களில் அதிக வெற்றிகளைப் பெறும் கட்சியைச் சார்ந்த ஒருவர் அடுத்த ஜனாதிபதியாகலாம். விடயம் என்னவென்றால், Renaissance (RE) கட்சியைச் சார்ந்த இமானுவல் மேக்ரான், ஏற்கனவே இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்துவிட்டார்.பிரான்ஸ் சட்டப்படி, இரண்டு முறை ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர், தொடர்ந்து மூன்றாவது முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாது.

மேக்ரான் கட்சியைப் பொருத்தவரை, அவருக்கு அடுத்தபடியாக என பிரபலமாக யாரும் இல்லை. இந்நிலையில், நடைபெற்றுவரும் மேயர் தேர்தல்களில், முதல் சுற்றில், Marine Le Pen சார்ந்த வலதுசாரிக் கட்சியான National Rally (RN)யும், தீவிர இடதுசாரிக் கட்சியான Jean-Luc Mélenchon சார்ந்த La France Insoumise (LFI) கட்சியும், அதிக அளவில் இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சின் அடுத்த ஜனாதிபதி யார்? கட்டியம் கூறும் தேர்தல் முடிவுகள் | France Localelection Result Predict Next President

ஆக, இம்மாதம் 22ஆம் திகதி இறுதிச் சுற்று தேர்தல்கள் நடைபெறும் நிலையில், அதன் பின், எந்தக் கட்சி அதிக இடங்களைப் பெறுகிறதோ, அக்கட்சி சார்ந்த ஒருவர், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது.