பிரான்சில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் நடந்த கொள்ளை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பட்டப்பகலில் நகைக்கடை ஒன்றில் நுழைந்த சிலர், துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.

சனிக்கிழமை, பாரீஸிலுள்ள Harry Winston என்னும் பிரபல நகைக்கடைக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்றின் உதவியுடன் கொள்ளையர்கள் சிலர் நுழைந்துள்ளார்கள்.

ஒருவர் கடை வாசலில் துப்பாக்கியுடன் காவல் நிற்க, கடைக்குள் நுழைந்தவர்கள் நகைகளை அள்ளிக்கொண்டு அதே மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்கள்.

பிரான்சில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் நடந்த கொள்ளை | Jeweler Robbery Gunpoint Broad Daylight In France

பொலிசார் அவர்களைப் பின்தொடர முயற்சிக்கும்போது, அவர்கள் பெரிய துப்பாக்கி ஒன்றைக் காட்டி மிரட்டியதால் அவர்களைப் பின் தொடர இயலாமல் போனதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

திருடப்பட்ட நகைகளின் மதிப்பு பல மில்லியன் யூரோக்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிசார் திருடர்களைத் தேடிவருகிறார்கள்.