பிரான்சில் புதிய குடியேற்ற வாசிகளுக்கான சட்டம்! -வேலை உள்ளவர்களுக்கு வதிவிட அனுமதி!

பிரான்சில் புதிய குடியேற்ற வாசிகளுக்கான சட்டம் மேல் சபையில் உள்ளது. அச் சட்டம் தொடர்பாக ஜனவரி 25 ஆம் திகதி அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

வேலை உள்ளவர்களுக்கு வதிவிட அனுமதி கொடுக்க அரசாங்கம் முடிவெடுக்கவுள்ளது. பதிந்து வேலை செய்பவர்கள், பதியாது வேலை செய்பவர்களும் உள்ளனர்.

பதிந்து வேலை செய்பவர்களால் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கிறது. மேலும் பதிந்து வேலை செய்பவர்களால் வரி செலுத்தப்படுகிறது.

பதியாது வேலை செய்பவர்களால் முதலாளிகளுக்கு மட்டுமே இலாபம் . பதியாது வேலை செய்பவர் சம்பளம் பெற்றுகக்கொள்கிறார்.அதே வேளை அரசாங்கத்திடம் இருந்து மருத்துவம் போன்ற உதவிகளையும் பெற்றுக்கொள்கிறார். ஆனால், இவர்களால் அரசாங்கத்திற்கு வருமானம் இல்லை . இதனால் இவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் வேலை உள்ளவர்களுக்கு வதிவிட அனுமதி கொடுக்கும் சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.

எப்படியான பணியாளர்களுக்கு விசா வழங்கப்படும்?

1.கட்டட வேலைகள் செய்பவர்கள்
2. உணவகங்களில் கஸ்ரமான வேலை செய்பவர்கள்
3. முதியோரை பராமரிப்பவர்கள்

இச்சட்டத்தை எதிர்பவர்கள் யார்?

வலது சாரிகள்

எதிர்பதற்கான காரணம்?

விசா உள்ளவர்கள் பலர் வேலை இல்லாது இருக்கும் போது விசாவும் கொடுத்து வேலையும் கொடுக்க போகிறீர்களா?
என்பதே வலது சாரிகளின் வாதம்.

அதே வேளை இடதுசாரிகளும் அரசாங்கத்தை கேள்வி கேட்கின்றனர். வெளிநாட்டவர்களை கடுமையான வேலைகளுக்கு பயன்படுத்த போறீர்களா?

விசாவிற்கு யார் விண்ணபிக்கலாம்?

முதலாளிகளே பணியாளர்களுக்கான விசாவை கோர வேண்டும்.

விசாவிற்காக காலத்தை குடிவரவு திணைக்களமே தீர்மானிக்கும்

இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின் பதியாது வேலை செய்பவர்களை வைத்திருக்கும் முதலாளிகள் பெரும் தொகையில் தண்டப்பணம் காட்ட வேண்டும். அதுமட்டும் அல்ல முதலாளியின் தொழில் உரிம பத்திரம் ரத்து செய்யப்படும்.