பிரான்சுக்கு உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் நான்காவது இடம்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ள பிரான்ஸ், அமைதியான நாடுகள் பட்டியலில் 99ஆவது இடத்தில் உள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆனால், அமைதியான நாடுகள் பட்டியலில் பிரான்சுக்கு 99ஆவது இடம்தான் கிடைத்துள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்

Henley Passport Index என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.

பிரான்சுக்கு உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் நான்காவது இடம்: ஆனால்... | France Passport In 4Th At Powerful Passport List

ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

அவ்வகையில், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.

பிரான்ஸ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 186 நாடுகளுக்குப் பயணிக்கலாம்.

பிரான்ஸ் இப்படி சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் நான்காவது இடத்திலிருக்கும் அதே நேரத்தில், அமைதியான நாடுகள் பட்டியலில் பிரான்சுக்கு 99ஆவது இடம்தான் கிடைத்துள்ளது.

ஆம், Global Peace Index என்னும் அமைப்பு, ஆண்டுதோறும் அமைதியான அல்லது பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது.

அந்த பட்டியலில் 163 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், பிரான்ஸ் அந்தப் பட்டியலில் 99ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த பாதுகாப்பான நாடுகள் பட்டியல், குற்றங்கள், பயங்கரவாதம், அரசியல் நிலைத்தன்மை மற்றும் இராணுவமயமாக்கல் முதலான 23 பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.

பிரான்சைப் பொருத்தவரை, அதன் இராணுவமயமாக்கலே அது பட்டியலில் கீழே செல்ல பெருமளவில் காரணமாக அமைந்துவிட்டது.

அதாவது, ஒரு பெரிய ராணுவத்தைக் கொண்டிருத்தல், பல ஆபத்தான நாடுகளில் பிரெஞ்சுப் படைகள் முகாமிட்டிருத்தல் ஆகிய காரணங்களே பிரான்ஸ் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் 99ஆவது இடத்தைப் பிடிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.