பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைப்பு ; ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தேர்தலுக்கு அழைப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய தேர்தல்கள் ஜூன் 6 முதல் 9 வரை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நடைபெற்றது. அதில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனின் கட்சி தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.