பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸிக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

2007ஆம் ஆண்டு முதல், 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கோலஸ் சார்க்கோஸி.

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல் | Life Threat To Judge Who Sentenced Sarkozy

2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, சார்க்கோஸிக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்துவந்தது.

இந்நிலையில், சார்க்கோஸி வழக்கில், அவர் மீதான சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு உண்மை என முடிவு செய்துள்ள நீதிமன்றம், ஊழல், தேர்தல் பிரச்சாரத்துக்கு சட்டவிரோதமாக பணம் பெற்றது முதலான மற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து சார்க்கோஸியை விடுவித்துள்ளது.

இந்த வழக்கில் சார்க்கோஸிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 100,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல் | Life Threat To Judge Who Sentenced Sarkozy

அத்துடன், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிக்கு கொலை மிரட்டல்

இந்நிலையில், சார்கோஸி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியான Nathalie Gavarinoக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, கொலை மிரட்டல் தொடர்பில் இரண்டு விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.