மணிப்பூரில் மைத்தேயி இனத்தவர்கள் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த மே 3-ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே இந்த கலவரத்தில் உயிரிழந்த குகி-ஜோமி இனத்தைச் சேர்ந்த 35 பேரின்உடல்களை பாதுகாத்து வைத்துள்ளனர். சுராசாந்த்பூர் மாவட்டம் ஹாலாய் கோபி கிராமத்தில் உள்ளஒரு இடத்தில் அந்த 35 பேரின்உடல்களை மொத்தமாக நேற்று அடக்கம் செய்ய திட்டமிடப் பட்டிருந்தது.
இதை எதிர்த்து மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தற்காலிக தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் தலைமையிலான அமர்வு நேற்று காலை 6 மணிக்கு விசாரணை நடத்தியது. இருதரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள்இ இந்த விவகாரத்தில் இப்போது உள்ள நிலை தொடர வேண்டும் என மத்தியஇ மாநில அரசுகள் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு உத்தரவிட்டனர். இந்த மனு குறித்த விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்த உத்தரவின்படி உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இதனிடையேஇ குகி சமுதாயத்தினர் சங்க கூட்டமைப்பான இண்டிஜெனஸ் டிரைபல் லீடர்ஸ் போரம் (ஐடிஎல்எப்) வெளியிட்ட அறிக்கையில்இ “கலவரத்தில் உயிரிழந்தவர்களை ஒரே இடத்தில் மொத்தமாக அடக்கம் செய்வது தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சக அதிகாரிகளுடன் புதன்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடத்தினோம். அதிகாலை 4 மணிவரை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
உடல்களை அடக்கம் செய்யஉள்ள இடம் சட்டப்படி ஒதுக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது. மாநில முதல்வரும் இதே உறுதியை அளித்துள்ளார். இதையடுத்துஇ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கையை 5 நாட்களுக்கு தள்ளி வைத்துள்ளோம்.” என கூறப்பட்டுள்ளது.
இதனிடையேஇ உடல்களை அடக்கம் செய்ய திட்டமிட்டிருந்த கிராமத்தை ஒட்டியுள்ள விஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே பதற்றம் நிலவியது. பாதுகாப்புப் படையினர் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் திரண்டனர். அவர்கள் தங்களை உடல் அடக்கம் நடைபெறும் கிராமத்துக்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தினர்.
தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற இவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேமோதல் ஏற்பட்டது. காங்வாய்இ பூகாக்சாவ் ஆகிய 2 இடங்களில்ஏற்பட்ட மோதலில் 17 பேர் காயம்அடைந்தனர். பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
மீண்டும் ஊரடங்கு: இந்த மோதலைத் தொடர்ந்து கலவரம் பரவும் என கருதிய அதிகாரிகள் இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நேற்று பகலில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர்.