மதுபான சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நபர் பெட்ரோல்குண்டை எறிந்தார் – மெக்சிக்கோவில் 11 பேர் பலி

மதுபானசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நபர் மதுபானசாலைக்கு தீவைத்ததால் 11 உயிரிழந்த சம்பவம் மெக்சிக்கோவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் எல்லையில் உள்ள மெக்சிக்கோ நகரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

11பேர் உயிரிழந்த மதுபானசாலை எல்லைக்கு மிக அருகில் உள்ளது.

மதுபானசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நபர்  பெட்ரோல்குண்டுபோன்ற ஒன்றை எரிந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்களை தொந்தரவு செய்தமைக்காக அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

பெட்ரோல் குண்டுபோன்ற ஒன்று வீசப்பட்ட சம்பவத்தில் 7 ஆண்களும் நான்கு பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர் நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த பலர் எல்லைக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டு அமெரிக்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.