இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே நகரில் இன்று அதிகாலை பாரம் தூக்கி (கிரேன்) ஒன்று வீழ்ந்ததால் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பைக்கு வெளியே சம்ருதி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த பாரம் தூக்கியொன்றே இன்று அதிகாலை வீழந்துள்ளது.
இதனால், நிர்மாணத்துறை ஊழியர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
பாரிய கொங்கிறீட் மீது கிரேன் வீழ்ந்ததாகவும், அதன் சிதைவுகள் ஊழியர்கள் மீது வீழ்ந்ததாகவும், அப்படையினர் தெரிவித்துள்ளனர்.