மூன்று வித அளவுகளில் க்ரிஸ்டல் விஷன் 4K டிவி மாடல்களை அறிமுகம் செய்த சாம்சங்..!

சாம்சங் நிறுவனத்தின் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பிளாக்ஷிப் ஸ்மார்ட் அம்சங்களான மல்டி வாய்ஸ் அசிஸ்டன்ட், ஸ்லிம்பிட் கேம் கொண்ட வீடியோ காலிங், சோலார் ரிமோட் மற்றும் IoT லைட் சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த டிவி தரமான பிக்சர் மற்றும் சவுன்ட் அனுபவத்தை வழங்கும் பர்கலர் மற்றும் க்ரிஸ்டல் பிராசஸர் 4K உள்ளது.

பர்கலர் அம்சம் ஒரு பில்லியன் ட்ரூ கலர், க்ரிஸ்டல் பிராசஸர் 4K,குறைந்த ரெசல்யூஷன் கொண்ட தரவுகளை 4K தரத்துக்கு மேம்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள HDR கான்டிராஸ்ட்-ஐ மேம்படுத்தி, பயனர்கள் அதிக நிறங்கள் மற்றும் தெளிவான விஷூவலை பார்க்க செய்கிறது.

மூன்று புறமும் பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் 3D சரவுன்ட் சவுன்ட், இரண்டு விர்ச்சுவல் ஸ்பீக்கர்கள், அடாப்டிவ் சவுன்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

இந்த டிவியில் பில்ட்-இன் IoT ஹப் கொண்டிருக்கிறது. இந்த அம்சம் டிவியின் பிரைட்னசை தானாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் ஆட்டோ லோ லேடன்சி மோட், மோஷன் எக்செல்லரேட்டர் அம்சங்கள் உள்ளன. மேலும், ஸ்மார்ட் வொர்க், கேமிங் மற்றும் ஸ்மார்ட் வாட்சிங் மோட்கள் உள்ளன. இந்த டிவியுடன் வழங்கப்படும் சோலார் ரிமோட்-ஐ அறையில் உள்ள மின்விளக்கு மற்றும் வைபை ரவுட்டர்களை கொண்டே சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

சாம்சங் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி 43 இன்ச் மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 490

சாம்சங் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி 55 இன்ச் மாடல் விலை ரூ. 46 ஆயிரத்து 990

சாம்சங் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி 65 இன்ச் மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 990

புதிய சாம்சங் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டிவி-க்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.
 

சமீபத்திய செய்திகள்