மேலும் 2 எல்பிஜி டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜல சந்தியை ஈரான் மூடியது. கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 5-ல் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது. இதை ஈரான் மூடியதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து வட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இராக் ஆகிய 5 நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று முன்தினம் அறிவித்தார்.
ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை 4 எரிபொருள் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வந்துள்ளன. இந்நிலையில் மேலும் 2 எல்பிஜி டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதித்துள்ளது. இந்த கப்பல்களில் 90,000 டன்களுக்கு அதிகமாக சமையல் காஸ் கொண்டுவரப்படுகிறது. இந்த 2 கப்பல்களும் வளைகுடாவை கடந்து இந்தியா வந்து கொண்டிருக்கின்றன. மேலும் 5 எரிபொருள் கப்ப்லகள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஐக்கிய அரபு அமீரகம் அருகே காத்துக் கிடக்கின்றன.




