ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு மேலும் 19 ஆண்டு சிறை தண்டனை

ரஷியாவில் பிரதான எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அலெக்சி நவால்னி (49). இவர் அதிபர் விளாடிமிர் புதின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு இவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு கொடிய விஷம் உடலில் கலந்திருப்பதை ஜெர்மன் அரசும் வெளியிட்டது.

இதற்கிடையே, ரஷியாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நவால்னி ஏற்கனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். நவால்னி தற்போது மாஸ்கோவிவன் கிழக்கே உள்ள சிறையில் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். நவால்னியை முடிந்தவரை சிறைக்குள் வைத்திருப்பதற்காகவே புதிய விசாரணை நடத்தப்படுவதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நவால்னி மீது மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மேலும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அலெக்சி நவால்னி மீது பதியப்பட்ட மற்றொரு வழக்கில், அவருக்கு 19 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.