லெபனானில் இலங்கையர் எவரும் இதுவரை மோசமான பாதிப்புகள் எதனையும் எதிர்கொள்ளவில்லை

லெபனானில்  காணப்படும் நிலைமை காரணமாக இதுவரை இலங்கையர் எவரும் மோசமான பாதிப்புகள் எதனையும் எதிர்கொள்ளவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

லெபானிற்கான இலங்கை தூதரகத்தில் தங்களை பதிவு செய்துள்ள இலங்கையர்கள் மற்றும் இலங்கை அமைப்புகளுடன் தூதரகம் தொடர்ச்சியான தொடர்புகளை பேணிவருகின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உதவிகள் தேவைப்படும் இலங்கையர்களிற்கு தூதுவரும்  அதிகாரிகளும் உதவியை வழங்கிவருகின்றனர் என  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்