வங்கதேசத்தில் மேலும் ஓர் இந்து நபர் கொலை

வங்​கதேசத்​தில் மாணவர் தலை​வர் ஷெரீப் உஸ்​மான் ஹாடி படு​கொலையை தொடர்ந்து இந்​துக்​கள் மற்​றும் பிற சிறு​பான்​மை​யினருக்கு எதி​ரான வன்​முறை அதி​கரித்​துள்​ளது.

இதில் மைமன்​சிங் பகு​தி​யில் கடந்த 18-ம் தேதி தீபு சந்​திர தாஸ் என்ற இந்து இளைஞர் ஒரு கும்​பலால் அடித்​துக் கொல்​லப்​பட்​டார். இதையடுத்து அம்​ரித் மோண்​டல் என்ற இந்து இளைஞர் கொல்​லப்​பட்​டார்.இந்​நிலை​யில் இந்து சமூகத்தை சேர்ந்த பஜேந்​திர பிஸ்​வாஸ் (42) என்​பவர் நேற்று முன்​தினம் சக ஊழியர் நோமன் மியா என்​பவ​ரால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். தப்​பியோடிய நோமன் மியாவை போலீ​ஸார் கைது செய்​தனர். வங்​கதேசத்​தில் 2 வாரங்​களில் இந்​துக்​களுக்கு எதி​ரான 3-வது கொலை சம்​பவம் இது​வாகும்.