வியட்நாமின் ஃபூ குவொக் (Phu Quoc) தீவுக்கு அண்மையில் இன்று சனிக்கிழமை (11) சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இந்திய சுற்றுலாப் பயணிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்குள்ளான அந்தப் படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் ‘ஹான் மே ரட்’ (Hon May Rut) தீவிலிருந்து ‘ஆன் தோய்’ (An Thoi) துறைமுகத்தை நோக்கிச் பயணித்துள்ளனர்.
பயணத்தின் போது, ‘ஹான் மே ரட் நிகோய்’ (Hon May Rut Ngoai) தீவிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் படகு திடீரென படகு கவிழ்ந்ததில் அதிலிருந்த அனைவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




