விவேகானந்தர் சர்வதேச மன்ற உறுப்பினர்களை சந்தித்தனர் தேசிய மக்கள் சக்தியினர்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் விவேகானந்தர் சர்வதேச மன்ற உறுப்பினர்களை சந்த்தித்து கலந்துரையாடினர்.

விவேகானந்தர் சர்வதேச மன்ற (Vivekananda International Foundation) உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.

இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.