ஸ்பெயின் படைத் தளங்களை பயன்படுத்த அனுமதி மறுப்பு!

எமது நடவடிக்கைக்கு ஆதரவாக தனது படைத் தளங்களை பயன்படுத்த ஸ்பெயின் அனுமதி மறுத்துவிட்டது. பரவாயில்லை எந்த தளங்களையும் பயன்படுத்த நாங்கள் எவரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை. தேவைப்பட்டால் பயன்படுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எவ்வாறாயினும் ஸ்பெயினுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்துமாறு நான் பணித்துள்ளேன். பிரிட்டன் தொடர்பிலும் எனக்கு அதிருப்தி உண்டு.

ஈரான் மீதான நடவடிக்கை சில காலங்கள் நீடிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.