16 ஈரான் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா

அமெரிக்க, இஸ்​ரேலிய கூட்​டுப்​படை மற்​றும் ஈரானுக்கு இடையி​லான போர் நேற்று 12-வது நாளை எட்​டியது.

ஈரான் தனது எல்​லையை ஒட்​டிய ஹார்​முஸ் ஜலசந்​தியை ஏற்கெனவே முடக்​கி​யுள்​ளது. அவ்​வழி​யாக செல்​லும் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படும் என மிரட்​டல் விடுத்​துள்​ளது. இதனால் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்​லும் எண்​ணெய் கப்பல் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கண்​ணிவெடிகளை மிதக்கவிடும் ஈரானின் திட்​டத்​துக்கு எதி​ராக மேற்​கொள்​ளப்​பட்ட முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யில் 16 ஈரானிய கண்​ணிவெடி கப்​பல்​களை தங்​கள் படைகள் மூழ்​கடித்​த​தாக அமெரிக்கா தெரிவித்​துள்​ளது.

முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக ஈரான் கண்ணி வெடிகளை மிதக்கவிடத் தொடங்கியிருப்பதாக உளவுத்துறையினர் கூறியதாக அமெரிக்க ஊடகமான சிஎன்என் நேற்று முன்தினம் தெரிவித்தது.