பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் அழைப்பை ஏற்று, நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு மார்ச் மாதம் லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
அதன்படி, நைஜீரிய ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி ஒலுரேமி டினுபு ஆகியோர் எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை லண்டனில் தங்கியிருப்பார். இதன்போது விண்ட்சர் கோட்டையில் மன்னரின் விருந்தினராக அவர் தங்கியிருப்பார்.
37 ஆண்டுகளுக்குப் பின்னர் நைஜீரிய ஜனாதிபதி ஒருவர் பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவது இதுவே முதல் முறையாகும்.
கடைசியாக 1989-ல் நைஜீரியாவின் அப்போதைய இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் இப்ராஹிம் பாபங்கிடா, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்திக்க வந்ததே நைஜீரியாவின் கடைசி உத்தியோகபூர்வ பயணமாகும்.
2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு சுமார் 11 பில்லியன் டொலர்களகும் ஆகும். இது கடந்த ஆண்டை விட 11.4 சதவீதம் அதிகமாகும்.
2024 ஆம் ஆண்டு இரு நாடுகளும் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்த புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (ETIP) ஒன்றில் கையெழுத்திட்டன.
மன்னர் சார்ள்ஸ் நைஜீரியாவுடன் நீண்டகாலத் தொடர்பைக் கொண்டுள்ளார். அவர் இளவரசராக இருந்தபோது நான்கு முறை நைஜீரியாவுக்கு சென்றுள்ளார்.
இந்த வருகை “இலவான அதிகாரப் இராஜதந்திரத்தின்” ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இதில் அரச ஊர்வலங்கள் மற்றும் அரசு விருந்துகள் நடைபெறவுள்ளது.





