91 சிறார்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்: அவுஸ்திரேலிய சிறுவர் பராமரிப்பு ஊழியர் மீது வழக்கு

அவுஸ்திரேலியாவின் முன்னாள் சிறுவர் பராமரிப்பு ஊழியர் ஒருவர் 91 சிறார்களை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதுடன், அக்காட்சிகளை படம்பிடித்தார்  என வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இது மேற்படி நபர் மீது தொடர்பாக நீதிமன்றத்தில் 1,600 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள ஒரு டசினுக்கும் அதிகமான சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் 15 வருடங்களுக்கும் மேலாக, இளம் சிறுமிகளை இந்நபர் துஷ்பிரயோகப்படுத்தினார் என பொலிஸார் கூறுகின்றனர்.

45 வயதான இந்நபர், 2022 ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டார். எனினும், பொலிஸார் விசாரணை நடத்துவதற்கும்  பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் ஒரு வருடகாலம் சென்றுள்ளது.

இவர் மீது 246 பாலியல் வல்லுறவு குற்றச்சாட்களும் சிறார்களுடன் அநகாகரீகமான நடத்தை தொடர்பில் 673 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

சிறார்கள் துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட காட்சிகளை படம்பிடித்தமை, விநியோகத்தமை தொடர்பிலும் நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சுமார் 4,000 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தாம் கண்ட பயங்கரமான வழக்குகளில் ஒன்று இது என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.