அமெரிக்காவின் பிரபலத் தொலைக்காட்சித் தொடரான ‘பிரண்ஸ்’ தொடரில் சாண்ட்லர் கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றவர் மேத்யூ பெர்ரி.கடந்த 2023 அக்டோபர் 28, தனது 54 வயதில் மேத்யூ பெர்ரி லாஸ் ஏஞ்சல்சில் அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவரது ரத்தத்தில் கெட்டமைன் [ketamine] எனப்படும் போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக இருந்தது பின்னர் நடந்த பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
கெட்டமைன் என்றால் என்ன? மனநலம் சார்ந்த பிரசனைகளுக்கு கேட்டமைன் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
மனஉளைச்சல் மற்றும் மனப் பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்த மேத்யூ அதை குணப்படுதவுவதற்காக கெட்டமைன் உட்கொளள்ளத் தொடங்கியுள்ளார்.
ஆனால் ஒரு கட்டத்தில் அவர் கெட்டமைனுக்கு அடிமையாகி உள்ளார். .
சூழ்ச்சியில் சிக்கிய மேத்யூஇதனைப் பயன்படுத்தி இரண்டு மருத்துவர்களுடன் சேர்ந்து மேத்யூவின் உதவியாளர் அவருக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்பில் கெட்டமைன் போதைப் பொருளைத் தொடர்ந்து வழங்கி பணம் பறித்து வந்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக மேத்யூவின் உதவியாளர், அந்த இரண்டு மருத்துவர்கள் உட்பட 5 பேர் போலீசில் சிக்கினர்.கெட்டமைன் ராணிஇவர்களுள் முக்கியமானவர் லாஸ் ஏஞ்சல்சின் கெட்டமைன் ராணி [Ketamine Queen] என்று அழைக்கப்படும் போதைப்பொருள் விற்பனையாளர் ஜாஸ்வீன் சங்கா [42 வயது] . ஹாலிவுட் பிரபலங்களும் பணக்காரர்களும் வாழும் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரில் ஜாஸ்வீன் சங்கா போதைப்பொருட்களை சப்பளை செய்து வந்துள்ளார்.
.போதை சாம்ராஜ்யம்மேத்யூவுக்கு அதிக கெட்டமைன் டோஸ்களை ஜாஸ்வீன் கொடுத்திருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சங்காவின் குடியிருப்பில் 79 பாட்டில்களில் திரவ கெட்டமைன்கள், 2000 மெத் மாத்திரைகள், கோகைன்கள் ஆகியவை பிடிபட்டன.எரிக் பிளெமிங் என்ற இடைத்தரகர் மூலம் மேத்யூவுக்கு சங்கா கெட்டமைன்களை விற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்தது.
ஒரு குப்பி கெட்டமைன் 12 டாலர்கள் என்று இருந்த நிலையில் மெத்தியூவிடன் ஒரு குப்பி கெட்டமினை 1000 டாலர்கள் வரை இந்த கும்பல் ஏமாற்றி விற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
.தீர்ப்பு:கெட்டமைன் விற்பனையால் மரணம் விளைவித்தது உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளை ‘கெட்டமைன் ராணி’ என அறியப்படும் ஜஸ்வீன் சங்கா மீது சுமத்தப்பட்டது.
அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கூற்றுப்படி, மேத்யூ பெர்ரியின் மரணத்திற்குப் பிறகும் அவர் எந்த வருத்தமும் காட்டவில்லை என்றும், தொடர்ந்து அந்த போதைப்பொருளை விற்று வந்ததாகவும் வாதிடப்பட்டது.
ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், பின்னர் தனது வாக்குமூலத்தை அவர் மாற்றிக்கொண்டார். .இந்த சூழலில் மேத்யூ பெர்ரிக்கு போதைப்பொருள் விநியோகித்த வழக்கில் ஜஸ்வீன் சங்காவுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்வீனைத் தவிர, மேத்யூவின் மரணம் தொடர்பான வழக்கை எதிர்கொள்பவர்களில் 2 மருத்துவர்கள் மற்றும் மேத்யூவின் தனிப்பட்ட உதவியாளர் ஆகியோரும் அடங்குவர்.கடந்த ஆண்டு டிசம்பரில், சட்டவிரோதமாக கெட்டமைன் வழங்கியதற்காக டாக்டர் சால்வடார் பிளாசென்சியாவுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மற்றொரு மருத்துவரான மார்க் சாவேஸுக்கு எட்டு மாதங்கள் வீட்டுக் காவல் விதிக்கப்பட்டது.ஆகஸ்ட் 2024 முதல் காவலில் இருந்த ஜஸ்வீனுக்கு தற்போது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.




