பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஸ்தார் அருகே 5.6 ரிக்டர் அளவில் இன்று சனிக்கிழமை (17) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீற்றர் (6 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பலுசிஸ்தானில் உள்ள ஜல் மக்ஸி, ஜாபராபாத் மற்றும் நசிராபாத் ஆகிய பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.
சில இடங்களில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் நிலநடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும் அதிக ஆபத்துள்ள மண்டலமாகக் கருதப்படுவதாகக் கூறப்படுகிறது.