பிரபல தமிழ் அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியும், ஓய்வுநிலை ஆசிரியருமான சி.அ.யோதிலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை (09.10.2026) அதிகாலை தனது-70 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

வயிற்றுப் பகுதியில் கட்டியொன்றை அகற்றுவதற்காக நேற்று வியாழக்கிழமை (08.10.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நடந்த அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார்.