பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல் நலக்குறைவு காரணமாக இன்று (அக்.25) காலமானார். அவருக்கு வயது 72.

உடல்நல பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சமையல் கலைஞர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மிகவும் பிரபலமான சமையல் கலைஞராக திகழ்ந்தவர் செஃப் தாமு. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளின் மூலம் அனைத்து தரப்பிலும் புகழ் பெற்றவராக விளங்கினார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞர் செஃப் தாமு ஆவார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு தொடர்ந்து 24 மணி நேரம், 30 நிமிடங்கள், 12 வினாடிகளில் மொத்தம் 617 வகையான உணவுகளை தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். சமையல் துறையில் செஃப் தாமுவின் சாதனையை பாராட்டி 2025-ம் ஆண்டு மத்திய அரசு அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.