பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு இன்று (04.10.2026) ஞாயிற்றுக்கிழமை கொலம்பஸ் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.

தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் பாலர் நிலைதொடக்கம் வளர்தமிழ் 5 வரை கற்பிக்கும் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான இச்செயலமர்வு காலை 09.31 மணிக்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதத்துடன் ஆரம்பமானது.

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.நாகஜோதீஸ்வரன் அவர்களின் வரவேற்பு உரையோடு ஆரம்பமானது.

தொடர்ந்து ஆசிரிய பயிற்றுநர்களின் செயலமர்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

ஆசிரியர்களுக்கான  "இணையவழிக்கற்கைவளம்" எனும் திறனறிதல் இடம்பெற்றது. இதில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற ஆசிரியை ஒருவர் மதிப்பளிக்கப்பட்டார்  

மதிய போசனத்தைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்வாக டென்மார்க் நாட்டில் இருந்து வருகைதந்த முன்னாள் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரும், நாடக ஆசிரியரும், எழுத்தாளருமான திரு.கதிரேசர்பிள்ளை ஆதவன் அவர்கள்  “ஆற்றுகை வழி தமிழ்மொழிக் கற்பித்தலும் அணுகுமுறையும்”  என்ற தலைப்பில் செயலமர்வை நடாத்தியிருந்தார்.
ஆசிரியர்களும் அதனை உள்வாங்கி சிறப்பாக செயல்வடிவம் கொடுத்திருந்தனர்.

இந்நிகழ்வு குறித்த செயலமர்வை மிகவும் சிறப்பாகக்கியிருந்தது.

ஆசிரியர்கள் தமது கருத்துரை நேரத்தில் பயிற்றுநர் திரு.கதிரேசர்பிள்ளை ஆதவன் அவர்களுக்கு உணர்வோடு நன்றி உரைத்தனர். அவரும் ஆசிரியர்களைப் பாராட்டி வாழ்த்தி யிருந்தார்.

தொடர்ந்து

நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்,  13-02-1985 இல் நடைபெற்ற கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடர்பாக வெளியான வரலாற்றுப் பதிவான "விடிவுக்கு முந்திய மரணங்கள்" எனும் நூல்,  கடந்த 20-09-2026 அன்று நடைபெற்ற 10வது தியாக தீபம் திலீபன்  ஆய்வரங்கில்  தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் மீள்வெளியீடு செய்யப்பட்டது.

இந்த  ஆசிரியர்கள் செயலமர்வில் "விடிவுக்கு முந்திய மரணங்கள்" மீள்பதிப்பின் "மின்னூல்" தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு. நாகஜோதீஸ்வரன் அவர்களால்  தமிழ்ச்சோலை இணையத்தளத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது.

இம்முறையும் செயலமர்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதியஉணவு, தேநீர், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய   தமிழ்ச்சோலை ஆசிரியர் செயலமர்வில் வெளிமாகாணங்களின் தமிழ்ச்சோலை ஆசிரியர்கள்   சூம் செயலி ஊடாக இணைவதற்கான.
சூம் இணைப்பு காலை 9.15 இல் இருந்து இயங்கலையில் இருந்தது

வழமைபோன்று ஆசிரியர் குழுப்படம் எடுக்கப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து செயலமர்வு நிறைவுகண்டது.

எதிர்வரும் 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு வளர்தமிழ் 6 முதல் வளர்தமிழ் 12 வரை தமிழ் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு COLOMBES பகுதியில் இடம்பெறவுள்ளது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -செய்திப்பிரிவு)