யாழ் தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும் பிரபல இலக்கியவாதியுமான பூங்கோதை என அழைக்கப்படும் கலா சிறீரஞ்சன் காலமானார்.
ஆசிரியர், இலக்கியவாதி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சமூக சேவையாளர் என பன்முக ஆளுமையான
பூங்கோதை ஸ்ரீரஞ்சன் (கலா ஸ்ரீரஞ்சன்) லண்டனில் காலமானார்.
அவர் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரியவருகின்றது. இவரது மறைவு இலக்கியவாதிகளிடத்தில் கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.






