ஐரோப்பாவில் விமானியாக கால்பதித்த ஈழத்தை சேர்ந்த இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார்.

விடத்தல்தீவில் வசிக்கும் அருள்வாசகம் பத்திமலர் ஆகியோரின் பேரனும் மொறின் பெல்சியா மற்றும் அன்ரன் ஜெறாட் ஆகியோரின் மகனும் இவர் ஆவார்.

9.3.1998ஆம் திகதி பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றிருந்தார்.

தொடர்ந்து பின்லாந்து தேசத்தில் மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

 

மேலும் ஸ்பெயினின் பர்கோஸ் நகரில் உள்ள FLYBY AVIATION ACADEMY யில் இணைந்து ATPL ஒருங்கிணைந்த பாடநெறியில் அனைத்து அதிகாரப்பூர்வ ATPL தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றார்.

பின்னர், ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், (EASA CPL(A) MULTI-ENGINE PISTON (MEP) மற்றும் கருவிகளின் மதிப்பீடு (IR), செயல்திறன் அடிப்படையிலான வழிநடத்துதல் (PBN) மற்றும் ADVANCED UPRT தடுப்புமுறை மற்றும் மீட்பு பயிற்சி அதாவது விமான கட்டுப்பாட்டு இழப்பிலிருந்து மீட்பு பயிற்சி ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

 

ATPL ஏர்லைன் போக்குவரத்து விமானி ஒருவர் பெறக்கூடிய விமான உரிமத்தை பெற்றுள்ளார். இது ஒரு விமானி பெறக்கூடிய அதிக தரமான உரிமமாக இருப்பதுடன் இவ்வுரிமத்தை கொண்டு ஒருவர் வணிக விமானங்களில் தலைமை விமானியாக (Captain) பணியாற்ற முடிகிறது.

விமானியாக சரித்திரத்தில் இடம்பிடித்து சாதனை புரிந்த அனுஜனின் மன்னார் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்