கனடா – ஒன்ராறியோ மாகாணத்தின் பிரம்டன் நகரில் அமையப் பெற்றுள்ள தமிழின அழிப்பு நினைவக வளாகத்தில் கனடியத் தமிழர் தேசிய அவை அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலைப் பெரு விருட்சத்திற்கான ‘விடுதலை நீர்’ சேகரிப்பு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகக் குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் முகமாக இந் நிகழ்வு இடம்பெற்றது.


