கறுப்புயூலையின் நினைவு வாரத்தில் பல்லின மக்களைச் சந்தித்த தமிழ் இளையவர்கள்

கறுப்பு யூலையின் நினைவு வாரமாகிய 27.7.2023 வியாழக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரத்தில் பல்லின மக்களுக்கான ஒன்றுகூடலை தமிழ் இளையோர் அமைப்பும், மக்களவையும் இணைந்து நடாத்தினர்.
இக் கலந்துரையாடலில் பல்லினத்தைச் சார்ந்த இளையவர்களும் மக்களும் கலந்து கொண்டு மிக ஆர்வத்துடன் தொடர்ச்சியான சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழின அழிப்பு சம்பந்தமான தகவல்களைக் கேட்டறிந்து கொண்டனர்.