தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் மூன்றாவது தமிழியல் இளங்கலைமாணிப் பட்டமளிப்பு விழா

தமிழியல் இளங்கலைமாணி மூன்றாவது பட்டமளிப்பு விழா  21/09/2025 அன்று Savigny le Temple நகரிலுள்ள Millenium அரங்கில் நடைபெறவுள்ளது.
இரு அமர்வுகளிலும் ‘மண்ணும் மக்களும்’ என்னும் பொருள் ஒலிக்க நடைபெறும் இப்பட்டமளிப்பு விழாவில்  மூன்று நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
இப்பட்டமளிப்பு விழாவில் 40 பட்டகர்கள் பட்டம் பெறவுள்ளனர். ஏற்கனவே 2018,2023 ​ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இரு பட்டமளிப்பு விழாவிலும் மொத்தமாக 62 பட்டகர்கள் பட்டம் பெற்றுள்ளனர். புலம்பெயர் நாடொன்றில் தமிழ்மொழியில் நூறு வரையானவர்கள் பட்டம் பெற்றது இதுவே வரலாற்றில் முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவின் காலை அமர்வாக, தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கு நடைபெறவுள்ளது. இவ்வாய்வரங்கில் ஐந்து ஆய்வுக்கட்டுரைகள் ஒப்பளிக்கப்படவுள்ளன. ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும்  இவ்வாய்வரங்கில் ஆய்வு நூலானது தமிழ் , பிரெஞ்சு , ஆங்கிலம் என மும்மொழியிலும் வெளியிடப்படவுள்ளன.
மேலும், இளம் பட்டக எழுத்தாளர்களால் எழுதப்பட்ட விதைப்பு –  2 எனும் சிறுகதைத் தொகுப்பும் ஆதிலட்சுமி சிவகுமாரால் எழுதப்பட்ட முட்காட்டுப் பூ என்னும் புதினமும் வெளியிடப்படவுள்ளன.

சமீபத்திய செய்திகள்