வென்மேரி அறக்கட்டளையின் இரண்டாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நாளை {6}பிரான்ஸ் நாட்டில் மாலை 2.00 மணியளவில் இடம் பெறவுள்ளது.
அனைத்து அன்பு உள்ளங்களையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டி நிற்கின்றனர்.
எமது இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய மாமணிகளை இனங்கண்டு மதிப்பளித்து, பாராட்டி, வாழ்த்தி ஏனையோர்க்கும் முன்மாதிரியாகத் திகழும் மண்ணின் மாமணிகளை பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட வென்மேரி அறக்கட்டளையின் முதலாவது விருதுகள் வழங்கும் விழா, கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் (17/08 2022 -இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில்) நடைபெற்றது.