பூஜித் மற்றும் ஹேமசிறியின் மரண தண்டனையால் ஆபத்தில் இருந்து தப்பித்த சக்திவாய்ந்த அரசியல்வாதிகள்!
Ad Space
Ad Space
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துவிட்டு சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் சிலரை தப்பிக்க வைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா என சிவில் செயற்பாட்டாளர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம்(03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
போதியளவான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியதாகத் தெரிவித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக சூழ்ச்சி செய்தவர்கள், நிதியுதவி வழங்கியவர்கள் மற்றும் ஆதரவாக செயல்பட்ட அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
உண்மையைக் கண்டறிந்து தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் முறையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
எனினும், பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய இருவருக்கு மாத்திரம் தண்டனை வழங்கிவிட்டு தொடர்புடைய சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் சிலரை இந்த அரசாங்கம் தப்பிக்க வைக்க முயற்சிக்கின்றதோ என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.
ஏனெனில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக முன்னர் விசாரணை செய்து குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான சில உயர் அதிகாரிகளிடமே மீண்டும் தற்போதைய விசாரணைகளும் ஒப்படைக்கப்பட்டிருப்பது இந்த வழக்கின் நடுநிலைத்தன்மையைப் பாதிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space