இந்நாட்டின் சுகாதாரத் துறையினை மேம்படுத்தும் நோக்குடன், மீரிகம ஆதார வைத்தியசாலையில் தேசிய மட்டத்திலான சிறுநீரகக்கல் அறுவை சிகிச்சை பரிந்துரை மத்திய நிலையத்தை நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ள தாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் மீரிகமவில் நடைபெற்ற விசேட கலந்துறையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீரிகம ஆதார வைத்தியசாலையில் தேசிய மட்டத்திலான சிறுநீரகக்கல் அறுவை சிகிச்சை பரிந்துரை மத்திய நிலையம் ஒன்றை நிறுவும் திட்டம் மீரிகம ஆதார வைத்தியசாலைக்கு மாத்திரமன்றி, தேசிய ரீதியில் அனைத்து மக்களும் பயன்பெறக்கூடிய ஒரு திட்டமாகும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய "அதிக கொள்ளளவு கொண்ட சிகிச்சை மத்திய நிலையமாக" இதனை உருவாக்குவதன் மூலம், நாடு முழுவதும் சிறுநீரகக்கல் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்போர் பட்டியலை விரைவாகக் குறைக்க முடியும்.
கடந்த காலங்களில் பல வைத்தியசாலைக் கட்டடங்களும் உபகரணங்களும் உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடந்தன. தற்போதைய அரசாங்கம் இவ்வாறான அரைகுறைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, அவற்றை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டடங்கள் மாத்திரமன்றி, அவற்றுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் மற்றும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இத்திட்டத்தை விரைந்து ஆரம்பிக்க கொடையாளர்களின் பங்களிப்பும் கிடைக்கும் என எதிர்பார்ப்பர்கிறோம் என்றார்.