யாழில் இளம் தவில் கலைஞர் உயிர் மாய்ப்பு!
Ad Space
Ad Space
இளம் தவில் கலைஞர் ஒருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கை சேர்ந்த பிரசாந் சச்சின் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த கலைஞர் புதன்கிழமை (24) புங்குடுதீவு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தவில் கச்சேரிக்கு சென்று வந்துள்ளார். அதன்பின்னர் அச்சுவேலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தவில் கச்சேரி இருந்த நிலையில் அவர் அங்கு செல்லவில்லை.
அதன்பின்னர் புதன்கிழமை (24) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
குறித்த கலைஞர் தனது 8 வயதில் தவில் வாசிக்க ஆரம்பித்த நிலையில் தற்போது 17 வயது ஆகின்ற நிலையில் தனது கலை திறமையால் பலரது நெஞ்சங்களில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space