மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் மறுபார்வை – 01 அரசியல் கருத்துரையும் கலந்துரையாடலும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (18.10.2026) காலை-09.30 மணி முதல் பிற்பகல்-12.30 மணி வரை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெறும்.
இந் நிகழ்வில் பிரபல அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன், மூத்த பத்திரிகையாளர் அ.நிக்ஸன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு கருத்துரைகள் ஆற்றுவர். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெறும்.