யாழ்.மாவட்டச் செயலகமும், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடத்திய விசேட தொழிற்சந்தை நிகழ்வு இன்று சனிக்கிழமை (03.10.2026) காலை யாழ். மாவட்டச் செயலகத்தில் யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இன்றைய தொழிற் சந்தையில் 1600 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 50 தொழில் வழங்கும் நிறுவனங்களும், 12 தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் நிகழ்வில் பங்கேற்றன.