யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளின் அங்கமாக எங்கட புத்தகங்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் புத்தகக் கண்காட்சியும், விற்பனையும் இன்று வெள்ளிக்கிழமை (23.10.2026) காலை யாழ்ப்பாணப் பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.


இன்று ஆரம்பமான புத்தகக் கண்காட்சி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (25.10.2026) வரையான மூன்று தினங்களும் காலை-09.30 மணி முதல் மாலை-05 மணி வரை நடைபெறும். கண்காட்சி நிகழ்வின் ஒரு கட்டமாகப் புத்தக விற்பனையும் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.