யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய விஞ்ஞான பீடாதிபதியாக கலாநிதி. தபோதரன் தெரிவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக கணினி விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. கதிரவேலு தபோதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய விஞ்ஞானபீடப் பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜனின் பதவிக் காலம் இந்த மாதம்- 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான பீடச் சபைக் கூட்டம் புதன்கிழமை (27.05.2026) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் கலாநிதி.கதிரவேலு தபோதரன் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.