ரஷ்யாவிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (20) நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான 'ரொட்டும்ப அமில' என்பவர், மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு  அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இன்று ரஷ்யாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குறித்த சந்தேகநபர், விமான நிலையத்தில் வைத்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் 'கிளப் வசந்த' கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளவர் என்பதுடன், மேலும் பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும் தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.