தென் பசிபிக் நாடான வனுவாட்டு தீவுகளில் உள்ள கடல் பகுதியில் இன்று சனிக்கிழமை (24) 7.2 ரிச்டர் அளவிலான சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த பூமியதிர்வைத் தொடர்ந்து, வனுவாட்டு தீவு அதிகாரிகள் கடலோர மக்களை உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இந்நிலையில், தற்போது சுனாமி அச்சுறுத்தல் நீங்கியதையடுத்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த பூமியதிர்வால் பெரிய அளவில் சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.